/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி
/
கீழக்கரையில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி
கீழக்கரையில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி
கீழக்கரையில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி
ADDED : மே 22, 2025 11:51 PM
கீழக்கரை: தமிழக பால்வளத் துறை சார்பில் விற்பனை செய்யப்படும்
ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் 500 மில்லி., எம்.ஆர்.பி., விலையை ரூ.30 என அச்சிடப்பட்டுஉள்ளது. கீழக்கரை நகர் பகுதியில் உள்ள சில்லரை விற்பனையாளர்கள் சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கூறியதாவது:
ஆவின் பால் ஆரஞ்சு கலர் 500 மில்லி ரூ.30 என அச்சிடப்பட்டுள்ள நிலையில் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.3 வீதம் கூடுதலாக வைத்து ரூ. 33க்கு விற்கின்றனர்.
இதுகுறித்து மொத்த விற்பனையாளரிடம் கேட்டபோது, அரசு எங்களுக்கு தருவது 30 ரூபாய்க்கு தான் அதில் நாங்கள் ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து சில்லரை விற்பனையாளருக்கு கொடுக்கிறோம்.
சில்லரை விற்பனையாளர்கள் ரூ.31க்கு மேல் கூடுதலாக ரூ.2 வைத்து ரூ.33 க்கு விற்பனை செய்கின்றனர். எந்த ஒரு பொருளும் எம்.ஆர்.பி., விலையைவிட குறைவாக விற்கப்படும் காலத்தில் ஆவின் பால் மட்டும் எம்.ஆர்.பி., விலையை காட்டிலும் கூடுதலாக விற்பனை செய்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விலை ஏற்றத்திற்கு தமிழக அரசின் ஆவின் பால் துறை காரணமா அல்லது மொத்த விற்பனையாளர்கள் காரணமா சில்லரை விற்பனையாளர்கள் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த விளக்கத்தை அளிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன் வர வேண்டும் என்றனர்.