/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடும்பத் தகராறில் வெட்டு: ஒருவர் கைது
/
குடும்பத் தகராறில் வெட்டு: ஒருவர் கைது
ADDED : மார் 17, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில்: பரமக்குடி அருகே தியாகவன்சேரி சாத்தையா 61. ஆர்.காவனுார் முனியசாமி 45, ஆகியோர் நாகலிங்கம் என்பவரது மகள்களை திருமணம் செய்துள்ளனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை உள்ளது.
நேற்று சாத்தையா பருத்தி வயலில் வேலை செய்தார். அப்போது முனியசாமி தகராறு செய்து அரிவாளால் சாத்தையாவின் வயிற்றில் வெட்டினார். காயமடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நயினார்கோவில் போலீசார் முனியசாமியை கைது செய்தனர்.

