UPDATED : நவ 28, 2026 05:32 PM
ADDED : நவ 28, 2026 05:32 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட மை பாரத் திட்டம் சார்பில் சைபர் செக்யூரிட்டி இளையோர் பார்லிமென்ட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட இளையோர் அலுவலர் மேனுவல் பெர்லி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சந்தானவேலு முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு சைபர் செக்யூரிட்டி சம்பந்தமான வினாடி வினா போட்டி நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.எஸ்.பி., சண்முகம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்பு சைபர் குற்றம், சமூக வலைதளம் மூலம் நடைபெறும் மோசடிகள் பற்றியும் இணையவழி குற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன், அகில இந்திய வானொலி தொகுப்பாளர் பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.
