/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் சைக்கிள் போட்டி
/
ராமநாதபுரத்தில் சைக்கிள் போட்டி
ADDED : ஜன 05, 2025 11:52 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டிகள் நடந்தது.
பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில்,  சைக்கிள் போட்டிகள் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் போட்டியை துவங்கி வைத்தார்.
13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஆண்களுக்கு 15 கி.மீ., பெண்களுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்டோர்  பிரிவில் ஆண்களுக்கு 20 கி.மீ., பெண்களுக்கு 15 கி.மீ., 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஆண்களுக்கு 20 கி.மீ., பெண்களுக்கு 15கி.மீ., சென்று திரும்பி வர வேண்டும்.
போட்டிகளில் முதலிடத்திற்கு ரூ.5000 ம், 2ம் இடத்திற்கு ரூ.3000, 3ம் இடம்  ரூ.2000ம், நான்கு முதல் 10 இடம் பெற்றவர்களுக்கு ரூ.250 கேடயமும், பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்தார்.

