/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி
/
சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி
ADDED : ஏப் 16, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சைக்கிளில் சென்றவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
ராமநாதபுரம் புளிக்கார தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 55. இவர் பழக்கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன் தினம் (ஏப்.15)இரவு 10:00 மணிக்கு வேலையை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
கீழக்கரை ரோடு ரயில்வே பாலம் அருகில் ராமேஸ்வரம் செல்லும் ரோடு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். நகர் போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.