/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கடலில் சூறாவளியால் கொந்தளிப்பு
/
ராமேஸ்வரம் கடலில் சூறாவளியால் கொந்தளிப்பு
ADDED : ஜன 16, 2025 11:44 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் சூறாவளியால் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததால் பக்தர்கள் அச்சத்துடன் நீராடினர்.
வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் நேற்று காலை முதல் ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. பொங்கல் தொடர் விடுமுறையால் நேற்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் முடித்து திரும்பியவர்களும்ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர்.
இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடச்சென்ற போது அங்கு கடல் கொந்தளிப்பால் எழுந்த அலைகள் ஆக்ரோஷமாக மோதியது. இதனால் சேதமடைந்த படிக்கட்டு வழியாக நீராட சென்ற பலர் இடறி விழுந்து காயமடைந்தனர்.
மேலும் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் நீராடிச் சென்றனர். இந்த சூறாவளியுடன் கடல் கொந்தளிப்பு நாளை மறுநாள் வரை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.