/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
/
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ADDED : நவ 26, 2024 01:28 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது தாழ்வு மண்டலமாக மாறியதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சூறாவளியுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.
இதையடுத்து நேற்று காலை பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் மிதமான மழை பெய்தது.
கடலில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் மீனவர்கள் 2000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி பாதுகாப்பாக நிறுத்தினர்.