/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டி.மாரியூர் பள்ளியில் கட்டடம் சேதம்
/
டி.மாரியூர் பள்ளியில் கட்டடம் சேதம்
ADDED : நவ 15, 2024 06:47 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே டி.மாரியூரில் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடம் எந்த பராமரிப்பு பணியும் செய்யாததால் சேதமடைந்து வருகிறது.
சாயல்குடி அருகே மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை உள்ளது. தலைமை ஆசிரியர் உட்பட 15 ஆசிரியர்களும், 800க்கும் மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர். பள்ளி கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் பக்கவாட்டுச் சுவர்கள் சேதமடைந்தும் வருகிறது.
மாரியூர் மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் முத்துச்சாமி கூறியதாவது: பள்ளி கட்டடம் கட்டும் போதே பணிகள் தரமற்றதாக இருந்ததால் அப்போதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கட்டடத்தின் சுவர்கள் சேதமடைந்தும் படிக்கட்டுகள் இடிந்தும் காணப்படுகிறது. தரைத்தளம் மற்றும் இரண்டு மாடி கட்டடங்களை உள்ளடக்கிய கட்டடத்தின் அருகே உள்ள வகுப்பறை கட்டடம் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.
கட்டடத்தின் மேல் தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. அது தரமற்றதாக கட்டப்பட்டுள்ளதால் சேதமடைந்துள்ளது. வகுப்பறை ஜன்னல்கள் பெரும்பாலானவை சேதமடைந்துள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லை.
எனவே பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டடத்தில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும், என்றார்.