/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாணல் புற்களுக்கு தீயிடுவதால் பாதிப்பு
/
நாணல் புற்களுக்கு தீயிடுவதால் பாதிப்பு
ADDED : ஜூலை 07, 2025 03:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையில் இருந்து அஞ்சுகோட்டை செல்லும் ரோட்டின் இருபுறமும் நாணல் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. அந்த புற்களில் சிலர் தீ வைக்கின்றனர்.
இதனால் புகை மூட்டமாக உள்ளது. ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கபடுகின்றனர்.அப்பகுதியில் வசிப்போர் கூறுகையில், வயல்காட்டில் அமர்ந்து மது அருந்துவோர் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் அருகே கிடந்த குப்பையில் தீ வைக்கப்பட்டது. பெரும் விபத்து ஏற்படுவதற்குள் அணைக்கப்பட்டது.
போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.