/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு வயல்களில் தேங்குவதால் பாதிப்பு
/
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு வயல்களில் தேங்குவதால் பாதிப்பு
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு வயல்களில் தேங்குவதால் பாதிப்பு
காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு வயல்களில் தேங்குவதால் பாதிப்பு
ADDED : டிச 06, 2025 05:40 AM
திருவாடானை: மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பழயணக்கோட்டை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறி வயல்களில் பாய்வதால் விவ சாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக தொண்டிக்கு காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பழயணக்கோட்டை அருகே குழாய் உடைந்து நீர் வெளியேறி வயல்களுக்குள் செல்வதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பழயணக்கோட்டை விவசாயி நாக நாதன் கூறியதாவது:
கடந்த ஒரு மாதமாக குழாய் உடைந்து நீர் வெளியேறுகிறது. வீணாகும் இந்த நீர் அருகில் உள்ள வயல்களுக்கு செல்கிறது. ஏற்கனவே பெய்த மழையில் வயல்களில் நீர் தேங்கி யுள்ளதால் அந்த நீரை வெளியேற்றி வருகிறோம்.
இந்நிலையில் குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் நீர் வயல்களில் பாய்வதால் பெரும் பாதிப்பாக உள்ளது.
வயல்களில் நீர் தேங்கும் பட்சத்தில் பயிர்கள் வளர்ச்சி பாதிக்கும். இது தவிர தொண்டி பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் போதிய நீர் செல்லாததால் அப் பகுதி மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
எனவே குழாய் உடைப்பை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

