/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாரியூர் கோயில் கடற்கரையில் உடை மாற்றும் அறைகள் சேதம்
/
மாரியூர் கோயில் கடற்கரையில் உடை மாற்றும் அறைகள் சேதம்
மாரியூர் கோயில் கடற்கரையில் உடை மாற்றும் அறைகள் சேதம்
மாரியூர் கோயில் கடற்கரையில் உடை மாற்றும் அறைகள் சேதம்
ADDED : அக் 18, 2024 05:08 AM

சாயல்குடி: மாரியூரில் வருண பகவானால் பூஜிக்கப்பட்ட பூவேந்தியநாதர் சமேத பவளநிற வல்லியம்மன் கோயில் உள்ளது. ஏராளமானோர் தங்கள் கிராமங்களில் நடக்கும் முளைப்பாரி, கொடை விழா, கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு புனித நீராடி செல்கின்றனர்.
தை, ஆடி, மாகாளய அமாவாசை தினங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்வதற்காக வருகின்றனர்.
கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் விட்டுச் செல்லும் துணிகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல் மெத்தனமாக உள்ளது. இங்கு 1996ல் கட்டப்பட்ட 10 பெண்கள் உடை மாற்றும் அறையின் கட்டடம், கூரை சேதமடைந்து கதவுகள் இன்றி உள்ளது. அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழும் மன்னார் வளைகுடா கடலில் காற்றின் வேகத்தால் அடித்து செல்லப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் இயற்கை வளம் பாதிப்பை சந்திக்கின்றது. எனவே உடைமாற்றும் அறையை சீரமைக்க வேண்டும். குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதி செய்துதர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.