/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் கையடக்க மிஷின் சேதம்; பக்தர் மீது வழக்கு
/
ராமேஸ்வரம் கோயிலில் கையடக்க மிஷின் சேதம்; பக்தர் மீது வழக்கு
ராமேஸ்வரம் கோயிலில் கையடக்க மிஷின் சேதம்; பக்தர் மீது வழக்கு
ராமேஸ்வரம் கோயிலில் கையடக்க மிஷின் சேதம்; பக்தர் மீது வழக்கு
ADDED : அக் 29, 2024 06:58 AM
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஊழியரின் கையடக்க மிஷினை சேதப்படுத்திய பக்தர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் 52. இவர் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். இவர் சுவாமி சன்னதி முன் வரிசையில் காத்திருந்த போது அலைபேசியில் மூலவரை வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்ட கோயில் ஊழியர்கள் அலைபேசியை பறித்தனர். இதனால் கோயில் ஊழியருக்கும், சம்பத்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோயில் ஊழியர் வைத்திருந்த பக்தர்களுக்கு கட்டணம் பதிவிடும் கையடக்க மிஷின் கீழே விழுந்து உடைந்தது. கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் புகாரில் கோயில் போலீசார் பக்தர் சம்பத்குமார் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.