/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொட்டல்பச்சேரியில் புதிய தார் ரோடு சேதம்
/
பொட்டல்பச்சேரியில் புதிய தார் ரோடு சேதம்
ADDED : ஜன 25, 2025 07:18 AM
சிக்கல் : சிக்கல் அருகே பொட்டல்பச்சேரியில் இருந்து சிக்கல் பெரிய கண்மாய் வழியாக கடந்த வாரம் அமைக்கப்பட்ட புதிய தார் ரோடு சேதமடைந்துள்ளது.
சிக்கல் பெரிய கண்மாய் தடுப்பு மதகணை 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. மதகணையின் வழியாக தரைப்பாலம் செல்வதால் வெள்ள காலங்களில் தொடர் சிரமத்தை கிராம மக்கள் சந்திக்கின்றனர். இந்நிலையில் பொட்டல்பச்சேரியில் இருந்து சிக்கல் கண்மாய் வழியாக 600 மீ.,க்கு புதிய தார் ரோடு மற்றும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மேம்பாலம் தார் ரோடு தரமற்றதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க தார் ரோட்டை தரமாக அமைக்க வேண்டும். இதன் வழியாக முதுகுளத்துார், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

