/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பனில் புதிய தார் சாலை சேதம்: அரசு நிதி வீணடிப்பு
/
பாம்பனில் புதிய தார் சாலை சேதம்: அரசு நிதி வீணடிப்பு
பாம்பனில் புதிய தார் சாலை சேதம்: அரசு நிதி வீணடிப்பு
பாம்பனில் புதிய தார் சாலை சேதம்: அரசு நிதி வீணடிப்பு
ADDED : பிப் 13, 2024 04:38 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மாநில நெடுஞ்சாலைதுறை அமைத்த தரமற்ற புதிய தார் சாலை பெயர்ந்து வருகிறது. அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவத்துள்ளனர்.
பாம்பன் ஊராட்சியில் புளியமர ஸ்டாப் முதல் ரயில்வே ஸ்டேஷன் வரை 400 மீ., துாரம் உள்ள தார்சாலை மாநில நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானது.
இச்சாலை பராமரிப்பு இன்றி குண்டும், குழியுமாக கிடந்தது. சாலையில் செல்லும் டூவீலர், வாகனங்கள் டயர்கள் சேதமடைந்தது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலைதுறையினர் இங்கு புதிய தார்சாலை அமைத்தனர். ஆனால் தரமற்ற சாலை பணியால் பல இடங்களில் மக்கள் கையில் பெயர்த்து எடுத்தனர். இதனால் புதிய சாலை மீண்டும் குண்டும், குழியுமாகியுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் தரமற்ற சாலை அமைப்பதாகவும், இதற்கு அதிகாரிகள் ஆசி உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமாரை போனில் தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.