ADDED : அக் 16, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் இளையான்குடி ரோடு நோக்கன்கோட்டை விலக்கு வழியாக நோக்கன்கோட்டை, பெரியார் நகர், இருதயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
இந்த ரோடு பராமரிப்பின்றி தற்போது சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் மழையால் ரோட்டில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் அவ்வழியாக செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள், பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துக்களில் சிக்குகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதுடன் சேதமடைந்துள்ள ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.