/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொய்யாமொழி அம்மன் கோயில் ரோடு சேதம்
/
பொய்யாமொழி அம்மன் கோயில் ரோடு சேதம்
ADDED : ஜன 08, 2024 11:52 PM

ஆர்.எஸ்.மங்கலம் ; ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி ரோட்டில் காட்டு பரமக்குடி விலக்கில் இருந்து வாணியக்குடி பொய்யாமொழி அம்மன் கோயிலுக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் காட்டு பரமக்குடி விலக்கு முதல் கோயில் வரை உள்ள 3 கி.மீ., ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமம் அடைகின்றனர்.
மேலும் கோயிலுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்ததை காரணம் காட்டி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வர மறுப்பதுடன் கூடுதல் கட்டணம் கொடுத்தாலே கோயிலுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த ரோட்டை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.