/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராணிமங்கம்மாள் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
/
ராணிமங்கம்மாள் ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 18, 2024 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி : ரெகுநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி செல்லும் ராணி மங்கம்மாள் ரோட்டின் நடுவில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட ரெகுநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 2வது பிரதான வழியாக ராணிமங்கம்மாள் ரோடு அமைந்துள்ளது.
இந்த ரோடு பராமரிக்கப்படாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் இரவுநேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம்.
எனவே ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.