/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை சிறுபாலங்களில் ரோடு தடுப்பு கம்பி சேதம்: சீரமைக்க கோரிக்கை
/
உத்தரகோசமங்கை சிறுபாலங்களில் ரோடு தடுப்பு கம்பி சேதம்: சீரமைக்க கோரிக்கை
உத்தரகோசமங்கை சிறுபாலங்களில் ரோடு தடுப்பு கம்பி சேதம்: சீரமைக்க கோரிக்கை
உத்தரகோசமங்கை சிறுபாலங்களில் ரோடு தடுப்பு கம்பி சேதம்: சீரமைக்க கோரிக்கை
ADDED : மே 07, 2025 01:45 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் இருந்து ராணி மங்கம்மாள் சாலை வழியாக உத்தரகோசமங்கை பாலத்தின் இரு புறங்களிலும் தார் ரோடு தாழ்வாக இருப்பதாலும், தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளதால் கனரக வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ரோடு, தடுப்புகளை சீரமைக்க வேண்டும்.
திருப்புல்லாணியில் இருந்து ராணி மங்கம்மாள் சாலை வழியாக மேற்கு நோக்கிய சாலையாக உத்தரகோசமங்கை 10 கி.மீ., தொலைவில் உள்ளது. 2023ல் புதியதாக தார் சாலை அமைத்தும் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் வாறுகால் செல்லக்கூடிய சிறு பாலங்கள் கட்டியும் உள்ளனர்.
மூன்று அடி நீளம் உள்ள பாலத்தின் இரு புறங்களிலும் தார் சாலை அரை அடி உயரத்திற்கு தாழ்வாக இருப்பதால் வேகமாக வரக்கூடிய கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தாழ்வான பகுதியில் மோதி விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தார் ரோட்டிற்கும் சிறு பாலத்திற்கும் இடையே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் அவற்றில் செல்லும் போது இடையூறாகவும் பாதிப்பாகவும் உள்ளது. எனவே அவற்றை முறையாக கண்டறிந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சாலையோர தடுப்பு கம்பிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டது. தார் சாலை அமைப்பதற்காக அவற்றை அகற்றிய நிலையில் மீண்டும் அதே இடத்தில் அமைக்காமல் விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.