/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பார்த்திபனுார் பரளை ஆற்றில் பக்கவாட்டு சுவர்கள் சேதம்
/
பார்த்திபனுார் பரளை ஆற்றில் பக்கவாட்டு சுவர்கள் சேதம்
பார்த்திபனுார் பரளை ஆற்றில் பக்கவாட்டு சுவர்கள் சேதம்
பார்த்திபனுார் பரளை ஆற்றில் பக்கவாட்டு சுவர்கள் சேதம்
ADDED : ஜன 02, 2024 05:02 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து செல்லும் பரளை ஆறு தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ள நிலையில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துஉள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பாசன வசதியை மேம்படுத்தும் வகையில் பார்த்திபனுாரில் மதகு அணை கட்டப்பட்டது. வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் வைகை ஆற்றில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை செல்கிறது.
மேலும் வலது, இடது பிரதான கால்வாயில் இருந்து பல நுாறு கண்மாய்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் அதிகமாக தண்ணீர் வரும் காலங்களில் அவற்றை வெளியேற்றும் வகையில் வெள்ளப் போக்கி கால்வாய் எனப்படும் பரளை ஆறு செயல்படுகிறது.
பரளை ஆறு முதுகுளத்துார், கமுதி பகுதிகளில் உள்ள ரெகுநாத காவிரி, குண்டாறு வரை செல்கிறது. இதன் மூலம் நுாறுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் பயனடைகிறது.
பார்த்திபனூர் மதகு அணை செல்லும் வழியில்இந்த வெள்ளபோக்கி கால்வாயின் மேல் பாலம் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலம் சேதமடைந்துஉள்ளதுடன் பக்க வாட்டு சுவர்கள் இடிந்து கம்பிகள் தெரிகின்றன.
மேலும் குறிப்பிட்ட இடத்தில் மரக்கம்புகளை வைத்து தடுப்புகள்அமைத்துள்ளனர். இதனால் இந்த வழியாக செல்வோர் விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர். மேலும் பரளை ஆற்றில் 9 கி.மீ., சிமென்ட் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்துஉள்ளதால் முறையாக பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பொதுப்பணி துறையினர் இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

