/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளியில் திறக்கப்படாத கழிப்பறைக் கட்டடம் சேதம் நிதி வீணடிப்பு

ADDED : ஜன 30, 2024 12:10 AM
கமுதி- முதி அருகே கோட்டைமேட்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டடம் திறக்கப்படாமல் சேதமடைந்துள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
கோட்டைமேட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தனித்தனியாக ரூ.6 லட்சத்து 82 ஆயிரத்தில் கழிப்பறை கட்டப் பட்டது.
கழிப்பறைக்கு முறையாக தண்ணீர் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வந்தது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாகவே கழிப்பறை பூட்டியுள்ளது. கழிப்பறை திட்டப்பணிகள் அறிவிப்பு பலகை சுவர் இடிந்து விழுந்து தரைத்தளம் சேதமடைந்துள்ளது.
இதனால் அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தியும், கட்டடத்தை மராமத்து பணி செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.