/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசுப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர் பராமரிப்பு பணி செய்யப்படாத அவலம்

ADDED : பிப் 18, 2025 04:59 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்துள்ள சுற்றுச்சுவரை தற்போது வரை பராமரிக்காமல் உள்ளனர்.
முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகிண்டி, மைக்கேல்பட்டணம், கீழத்துாவல், மேலத்துாவல் கிருஷ்ணாபுரம், விளங்குளத்துார் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 400க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து இடிந்து விழுந்தது. தற்போது பள்ளியை சுற்றிலும் அறையும் குறையுமாக சுற்றுச்சுவர் உள்ளது. இதனால் பள்ளி நேரத்தில் கால்நடைகள் உலா வருவதால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். பள்ளி அருகே மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.
தற்போது ஒருசில பகுதிகளை மட்டும் சுற்றுச்சுவர் மராமத்து பணி செய்து வர்ணம் பூசப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த பகுதி எந்தவித பணியும் செய்யாமல் திறந்த வெளியிலே உள்ளது. எனவே பள்ளி முழுவதும் சுற்றுச்சுவர் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.