/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி எதிரே சேதமடைந்துள்ள வாறுகால்: மக்களுக்கு ஆபத்து
/
பள்ளி எதிரே சேதமடைந்துள்ள வாறுகால்: மக்களுக்கு ஆபத்து
பள்ளி எதிரே சேதமடைந்துள்ள வாறுகால்: மக்களுக்கு ஆபத்து
பள்ளி எதிரே சேதமடைந்துள்ள வாறுகால்: மக்களுக்கு ஆபத்து
ADDED : மே 08, 2025 02:19 AM

பரமக்குடி: பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் வாறுகால் கல்வெட்டு உடைந்த நிலையில் சீரமைக்கப்படாமல் அப்பகுதியில் நடந்து செல்லும் மக்களுக்கு ஆபத்து உள்ளது.
பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஆற்றுப்பாலம் செல்வதற்கு அய்யாத்துரை தெரு உள்ளது.
இத்தெரு ஐந்து முனை ரோடு செல்லும் சந்திப்பில் வாறுகால் கல்வெட்டு பாலம் இருந்தது. இந்தத் தெரு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு எதிரில் உள்ளது.
இந்நிலையில் வாறுகால் உடைந்த சூழலில் இதன் வழியாக செல்வதற்கு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பு உடைக்கப்பட்ட வாறுகால் கட்டப்படாமல் உள்ளதால் அந்த வழியாக மாணவிகள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். உடனடியாக வாறுகாலை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.