/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதடைந்த மின்வாரிய குடியிருப்பு கட்டடங்கள்
/
சேதடைந்த மின்வாரிய குடியிருப்பு கட்டடங்கள்
ADDED : ஜன 15, 2024 04:23 AM

திருவாடானை, : திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் சேதமடைந்து புதர் மண்டியுள்ள மின்வாரிய கட்டடங்களை அகற்ற வலியுறுத்தபட்டது.
சின்னக்கீரமங்கலத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கு மின்வாரிய அலுவலர்கள் தங்கி பணியாற்றும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏழு குடியிருப்புகள் கட்டப்பட்டது.
இந்த கட்டடங்கள் சேதமடைந்ததால் தற்போது முட்புதர் மண்டி விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறியுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், கட்டடங்கள் அனைத்தும் வீணாகியுள்ளது.
இங்கிருந்து வெளியேறும் விஷப் பூச்சிகள் அருகில் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது.
எனவே இந்த கட்டடங்களை அகற்றிவிட்டு மின்வாரிய ஊழியர்கள் தங்கி பணியாற்றும் வகையில் புதிய கட்டடங்களை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.