/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன் சேதமடைந்த மேல்நிலைத் தொட்டி
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன் சேதமடைந்த மேல்நிலைத் தொட்டி
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன் சேதமடைந்த மேல்நிலைத் தொட்டி
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் முன் சேதமடைந்த மேல்நிலைத் தொட்டி
ADDED : மார் 14, 2024 10:32 PM

பரமக்குடி, - பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் பல ஆயிரம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபடும்.
பரமக்குடி நகராட்சியில் 50 ஆண்டுகளைக் கடந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே உள்ளன. பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள 2 லட்சம் லி., குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. தொட்டியின் ஒட்டுமொத்த பலத்தை தாங்கி நிற்கும் கான்கிரீட் துாண்கள் உடைந்து கம்பிகள் தெரிகின்றன.
இதேபோல் தொட்டியைசுத்தம் செய்ய பயன்படுத்தும் சுருள் படிக்கட்டுகள் அனைத்தும் தினம் தினம் இடிந்து விழுகிறது. இதனால் தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலையில் அதன் மேல் டாப்புகளும் இடிந்து கம்பிகள் தெரிவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதனால் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்து பணி செய்வதால் கடந்த சில மாதங்களாக தொட்டியை சுத்தம் செய்ய முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் கண்ணகி தெரு, சுண்ணாம்புக்கார தெரு, பள்ளிவாசல் தெரு, மாதவன் நகர், ஆர்ச், ரயில்வே பீடர் ரோடு என பல தெரு மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தொட்டி இடியும் நிலையில் கீழ் பகுதியில் உள்ள நகராட்சி துாய்மைப் பணியாளர் கிளை அலுவலகம், போலீஸ் பீட் ரூம், மற்றும் சுற்றியுள்ள கடைகள், வீடுகள், பஸ் செல்லும் ரோடுகளில் பாதிப்பு ஏற்படும்.
எனவே நகராட்சி அதிகாரிகள் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

