/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்துள்ள சுற்றுச்சுவர்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்துள்ள சுற்றுச்சுவர்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்துள்ள சுற்றுச்சுவர்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்துள்ள சுற்றுச்சுவர்
ADDED : மே 30, 2025 11:39 PM

கமுதி: கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் விரிசலடைந்து சேதமடைந்துள்ளது.
பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேரையூர், இலந்தைகுளம், கள்ளிகுளம், புல்வாய்க்குளம், சாமிபட்டி, சித்திரங்குடி, செங்கோட்டைப்பட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் பலர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணிகளும் பரிசோதனை செய்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால்நடைகள் நுழையாமல் இருப்பதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
தற்போது சுற்றுச்சுவர் ஆங்காங்கே விரிசலடைந்து சேதமடைந்துள்ளது.
கிழே விழாமல் இருப்பதற்காக கற்களால் தாங்கி வைத்துள்ளனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம்.எனவே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.