ADDED : மார் 16, 2026 07:33 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பூங்குளத்தில் பயணியர் நிழற்குடையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்தும், தனியாக அமைக்கப்பட்ட இருக்கை சேதமடைந்தும் உள்ளது.
முதுகுளத்துார் அருகே பூங்குளம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற னர்.
இங்கு பல ஆண்டு களுக்கு முன்பு பயணியர் நிழற்குடை அமைக்கப் பட்டது.
தற்போது வரை பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றியம் சார்பில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்களுக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டது.
தற்போது அவை சேதமடைந்துள்ளது. பயணியர் நிழற்குடையும் சேதமடைந்திருப்பதால் வேறு வழியின்றி ஆபத்தான நிலையில் உள்ள இருக்கையில் காத்திருந்தும், மழை, வெயிலில் மரத்தடி நிழலில் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது.
எனவே சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்த னர்.
