தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாலாந்தரவையில் சேதமான கோயில் ஊருணி படிக்கட்டு

 வாலாந்தரவையில் சேதமான கோயில் ஊருணி படிக்கட்டு

 வாலாந்தரவையில் சேதமான கோயில் ஊருணி படிக்கட்டு


ADDED : பிப் 12, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள அம்மன் கோயில் ஊருணியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட படிக்கட்டுகள் விரைவில் சேதமடைந்தன.

அம்மன் கோயில் ஊருணி பகுதியில் 1000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ரூ. 5 லட்சத்தில் கடந்த ஆண்டு ஊருணி கரையில் கட்டப்பட்ட படித்துறை மூன்று மாதங்களுக்கு முன்பு சேதமடைந்து இடிந்து விழுந்தது. தரமற்ற கட்டுமானப் பணிகளால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே ஓராண்டிற்கு முன்பு கட்டப்பட்ட படித்துறையை மீண்டும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

தரமற்ற கட்டுமான பணிகளால் இது போன்று விரைவிலேயே படித்துறைகள் சேதமடைகின்றன. எனவே உரிய வழிகாட்டுதலை மண்டபம் யூனியன் அலுவலர்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us