/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடல்வாழ் உயிரின பாதுகாப்பை வலியுறுத்தி கடலுக்குள் நடனம்
/
கடல்வாழ் உயிரின பாதுகாப்பை வலியுறுத்தி கடலுக்குள் நடனம்
கடல்வாழ் உயிரின பாதுகாப்பை வலியுறுத்தி கடலுக்குள் நடனம்
கடல்வாழ் உயிரின பாதுகாப்பை வலியுறுத்தி கடலுக்குள் நடனம்
ADDED : ஏப் 30, 2025 07:04 AM

ராமேஸ்வரம்: கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே கடலுக்குள் சென்னை சிறுவன், சிறுமி நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தை சேர்ந்த அரவிந்த் மகள் ஆரத்தனா 11. இதே பகுதியை சேர்ந்த தினகரன் மகன் அஸ்வின் பாலா 14. இருவரும் கடலில் நீச்சல் மற்றும் நடனப் பயிற்சி பெற்றவர்கள். நேற்று உலக கடல் வாழ் உயிரின பாதுகாப்பு தினத்தையொட்டி கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், கடல் மாசுபடுவதை தடுக்க வேண்டி பாம்பன் பனந்தோப்பு கடற்கரையில் 10 அடி ஆழ கடலுக்குள் இறங்கி நடனம் ஆடினர்.
கடலுக்குள் 30 வினாடிகள் வரை மூச்சு பிடித்து நடனமாடி பிறகு கடல் மேல்மட்டத்தில் வந்து சிறிது இளைப்பாறினர். பின் மீண்டும் கடலுக்குள் சென்று நடனமாடினர். இதனை ஆரத்தனா தந்தை அரவிந்த், ஒரு மணி நேரம் காத்திருந்து வீடியோ எடுத்துள்ளார்.
இதில் ஆரத்தனா 2024 ஏப்.,3ல் இலங்கை டூ தனுஷ்கோடி வரை 29 கி.மீ., கடலில் நீந்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.