/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நம்பியான்வலசையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் ஆபத்து
/
நம்பியான்வலசையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் ஆபத்து
நம்பியான்வலசையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் ஆபத்து
நம்பியான்வலசையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் ஆபத்து
ADDED : அக் 08, 2025 01:01 AM
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே நம்பியான்வலசையில் கைக்கு எட்டும் தொலைவில் மின் கம்பி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
நம்பியான் வலசை பயணியர் நிழற்குடை அருகே உயரழுத்த மின்கம்பி செல்கிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக 5 அடி உயரத்திற்கு தாழ்வாகச் செல்லும் மின் கம்பியால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து வருகின்றனர். தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் மீது பட்டால் பேராபத்தாக முடியும். இது குறித்து மின்வாரியத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே திருப்புல்லாணி மின்வாரியத்தினர் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.