/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி- நயினார்கோவில் ரோடு சேதமானதால் ஆபத்து
/
பரமக்குடி- நயினார்கோவில் ரோடு சேதமானதால் ஆபத்து
ADDED : ஜன 08, 2024 11:48 PM

பரமக்குடி ; பரமக்குடியில் இருந்து நயினார்கோவில் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ள நிலையில் டூவீலர் ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.
நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வழிபட செல்வது வழக்கம். பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வழியாக நயினார்கோவில் ரோடு உள்ளது. இந்த ரோடு எமனேஸ்வரத்தில் துவங்கி 5 கி.மீ.,க்கு மேல் முழுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் ரோட்டில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் டூவீலர், வாகனங்களின் டயர்கள் பள்ளத்தில் சிக்கும் போது சறுக்கி விபத்துக்குள்ளாகின்றன. மேலும் பெரிய அளவில் குண்டும், குழியும் ஆங்காங்கே உள்ளதால் கார் உள்ளிட்ட வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன.
தொடர்ந்து இந்த வழியாக நுாற்றுக்கணக்கான கிராமங்கள் உட்பட ராமநாதபுரம் வரை அரசு பஸ் சேவை உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் உள்ள இப்பகுதியில் நயினார்கோவில் ரோடு வழியாக ஏராளமான விவசாய வாகனங்கள் செல்கிறது.
ஆகவே விவசாயிகள், பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து மக்களின் பாதுகாப்பு கருதி ரோட்டை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.