பரமக்குடியில் சாயும் நிலையில் காய்ந்த மரத்தால் ஆபத்து
பரமக்குடியில் சாயும் நிலையில் காய்ந்த மரத்தால் ஆபத்து
ADDED : ஜூலை 02, 2026 12:38 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி நெடுஞ்சாலையோரம் காய்ந்த மரம் சாயும் நிலையில் உள்ளதால் ஆபத்து காத்திருக்கிறது.
பரமக்குடி- மதுரை நான்கு வழி சாலையில் இருந்து மாநில நெடுஞ்சாலை செல்கிறது. தொடர்ந்து இருபுறங்களிலும் ஆங்காங்கே மரங்கள் உள்ளன. காட்டுப்பரமக்குடி மின் அலுவலகம் எதிரில் தனியார் மஹால் அருகில் ஒட்டுமொத்த மரத்தின் அடிப்பகுதி காய்ந்துள்ளது. இதனால் காற்றின் வேகத்தில் முறிந்து விழும் ஆபத்து உள்ளது.
தொடர்ந்து இது குறித்து நாளிதழில் செய்து வெளியாகும் போது அதிகாரிகள் கண் துடைப்பாக பார்த்து விட்டு செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மரத்தை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
