/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரம் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் ஆபத்து
/
ரோட்டோரம் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் ஆபத்து
ரோட்டோரம் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் ஆபத்து
ரோட்டோரம் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் ஆபத்து
ADDED : டிச 25, 2024 03:45 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் மற்ற வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுவதோடு விபத்து அபாயம் உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தினமும் பல்வேறு லாரி சர்வீஸ் மூலம் மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை ஆர்டரின் அடிப்படையில் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.
வெளியூர்களில் இருந்து பொருட்களை ஏற்றி வரும் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியான பரமக்குடி ரோடு, காந்தி வீதி, பஜார் வீதி, டி.டி.மெயின் ரோடு, புல்லமடை ரோடு என முக்கிய ரோடுகளில் ஆங்காங்கே சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொருட்கள் இறக்கப்படுகின்றன.
ஆங்காங்கே நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் அவ்வழியாக செல்லும் மற்ற வாகன டிரைவர்களும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். காலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே போலீசார் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சரக்கு வாகனங்களை நிறுத்தி சரக்குகளை சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.