/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து
ADDED : அக் 25, 2024 05:00 AM
ஆர்.எஸ்.மங்கலம்: விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆனந்துார் துணை மின் நிலையம் மூலம் 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், கிராமங்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் இருந்து விவசாய நிலங்கள் வழியாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் சப்ளை வழங்கப்படுகிறது.
விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் பெரும்பாலான பகுதிகளில் மரங்களை கடந்து செல்கிறது. இதனால் ஏற்படும் உராய்வு பிரச்னையால் சில பகுதிகளில் மின்கம்பிகளில் தொய்வு ஏற்பட்டு விவசாய பணிகளுக்கு இடையூறாக உள்ளன.
தற்போது விவசாயப்பணிகள் துவங்கி உள்ள நிலையில் பெரும்பாலான பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக குறுக்கே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
குறிப்பாக புல்லமடை, திருத்தேர்வளை, ராதானுார் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் அதிகஅளவில் விவசாய நிலங்கள் வழியாக மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.