ADDED : ஆக 07, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம், வண்ணாங்குண்டு, கிருஷ்ணாபுரம், முத்துப்பேட்டை, பெரியபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி களில் சாலையோரங் களில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பெரியபட்டினம், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கோழிகளின் கழிவுகள் மற்றும் அதன் இறகுகள் உள்ளிட்டவைகளை மூடையாக கட்டி சாலையோர விளை நிலங்களில் கொட்டுகின்ற னர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றில் ஏராளமான வெறி நாய்கள் கூட்டமாக திரிந்து அவற்றை உண்கின்றன. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே சுகாதாரத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் இதற்கான உரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி பாதுகாப்பான முறையில் இறைச்சி கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.