ADDED : ஜூன் 30, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை முதல் ஏர்வாடி செல்லும் சாலையின் இரு புறங்களிலும் அதிகளவு சீமைக் கருவேல மரங்கள் சாலையோரங்களில் வளர்ந்துள்ளன.
இரவு நேரங்களில் எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களின் முட்கள் வாகன ஓட்டிகளின் கைகளை பதம் பார்க்கிறது. சாலையோர முள் மரங்களால் பஸ்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.
முன்பு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு சாலை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மரங்களை அகற்றாததால் அடர்ந்து வளர்ந்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. மாவட்டம் நிர்வாகம் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
