/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் ஆபத்து
/
பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் ஆபத்து
ADDED : பிப் 17, 2024 04:42 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடிக்கு செல்லும் வகையில் பெரிய கண்மாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக இரு மாவட்டத்தினரும் எளிதாக வந்து செல்லும் நிலை உள்ளது.
இந்த பாலத்தின் வழியாக பஸ், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில் பாலத்தில் பெரும்பாலான பில்லர் துாண்கள் மற்றும் பக்கவாட்டு சுவர்களில் மரக்கன்றுகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
அந்த மரக்கன்றுகளின் வேர்கள் பாலத்தில் விரிசல்களை ஏற்படுத்துவதால் பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.