/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருட்டால் ஆபத்துங்க: ரயில்வே மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகள்
/
இருட்டால் ஆபத்துங்க: ரயில்வே மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகள்
இருட்டால் ஆபத்துங்க: ரயில்வே மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகள்
இருட்டால் ஆபத்துங்க: ரயில்வே மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகள்
ADDED : மார் 22, 2025 05:43 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியாமல் இரவில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் விபத்து அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணம் செய்கின்றனர். உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் --கீழக்கரை ரோட்டில் ரயில்வே கேட் மூடப்படும் போது பழைய பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க மக்கள் வலியுறுத்தினர். இதன் மூலம் திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சக்கரக்கோட்டை வழியாக ராமநாதபுரம் நகருக்கு எளிதாக வந்து செல்ல முடியும்.
மக்கள் கோரிக்கையை ஏற்று ரயில்வே பீடர் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே துவங்கி ரூ.30 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 2018ல் துவங்கியது. ஜவ்வாக இழுத்து 6 ஆண்டுகளுக்கு பிறகு 2024 செப்.,20ல் வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.
அதன் பிறகு தொடர் பராமரிப்பு இல்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியாமல் இரவு நேரத்தில் ரயில்வே மேம்பலாம் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.
குறிப்பாக பணி முடிந்து டூவீலர்களில் செல்லும் பெண்கள் திருட்டு அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இதற்கு உத்தரவிட வேண்டும்.