/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளி ரோட்டில் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்
/
அரசு பள்ளி ரோட்டில் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்
அரசு பள்ளி ரோட்டில் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்
அரசு பள்ளி ரோட்டில் அதிவேக வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : ஜன 04, 2024 01:49 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோட்டில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் மாணவர்களுக்க விபத்து அபாயம் உள்ளது. வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து புல்லமடை செல்லும் ரோட்டில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , மற்றும் தனியார் பள்ளி, மின்வாரிய அலுவலகம், கோயில், சர்ச் ஆகியவை உள்ளன. எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் சென்று வரும் பகுதியாக உள்ளன. இப்பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் மாணவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, புல்லமடை ரோட்டில், தேவையான இடங்களில் வேகதடுப்பு அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.