/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உணவு பதார்த்தங்களை பாலிதீன் பேப்பரில் பார்சல் செய்வதால் ஆபத்து
/
உணவு பதார்த்தங்களை பாலிதீன் பேப்பரில் பார்சல் செய்வதால் ஆபத்து
உணவு பதார்த்தங்களை பாலிதீன் பேப்பரில் பார்சல் செய்வதால் ஆபத்து
உணவு பதார்த்தங்களை பாலிதீன் பேப்பரில் பார்சல் செய்வதால் ஆபத்து
ADDED : மே 29, 2025 11:09 PM
சாயல்குடி: சிக்கல், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள ஒரு சில ஓட்டல்களில் பிளாஸ்டிக் இலை எனப்படும் பாலிதீன் தாள் பயன்பாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக காலை, மாலை நேர டிபன்களில் பாலிதீன் தாளின் உள்ளே இட்லி, பரோட்டா, வடை, தோசை, பொங்கல் உள்ளிட்ட பதார்த்தங்களை வைத்து பார்சல் செய்யும் போக்கு தொடர்கிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
ஓட்டல்களில் உணவு பார்சல் செய்வதற்கு வாழை இலை பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலமாக வாழை விவசாயிகள் பயன்பெறுவார்கள். வாழை இலைக்கான தொகையை கட்டணமாக உணவுடன் சேர்த்து பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக பாலித்தீன் பேப்பரை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் சூடாக உணவு பதார்த்தங்களை வைத்து பார்சல் செய்யும் போது அவற்றில் உணவு பொருள்களுடன் கெமிக்கல் வேதி வினை புரிகிறது.
இதனால் உணவை சாப்பிடும் போது உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. இது போன்ற உணவுப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவதால் கேன்சர் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
உணவு கலப்படத் தடுப்பு அதிகாரிகள் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசின் உத்தரவை காற்றில் பறக்க விடுவோர் மீது அபராதம், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.