/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நான்கு வழிச் சாலையில் அரியனேந்தல் பாலத்தின் கீழ் ஆபத்து
/
பரமக்குடி நான்கு வழிச் சாலையில் அரியனேந்தல் பாலத்தின் கீழ் ஆபத்து
பரமக்குடி நான்கு வழிச் சாலையில் அரியனேந்தல் பாலத்தின் கீழ் ஆபத்து
பரமக்குடி நான்கு வழிச் சாலையில் அரியனேந்தல் பாலத்தின் கீழ் ஆபத்து
ADDED : அக் 19, 2025 03:21 AM

குளம் போல் தேங்கும் மழை நீரால்...
பரமக்குடி: ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நகரில் நுழையும் அரியனேந்தல் பாலம் கீழ்பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்குவதால் வாகனங்கள் ஆபத்தான நிலையில் செல்கிறது.
மதுரையில் இருந்து பரமக்குடி அரியனேந்தல் வரை நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ராமநாதபுரத்திற்கு இரு வழி சாலை செல்கிறது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி நகரில் நுழைய அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் செல்லும் படி உள்ளது. ரோடு அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இப்பகுதியில் மின்விளக்கு வசதியின்றி இருளில் கிடக்கிறது.
மேலும் ஒவ்வொரு முறை மழை பெய்யும் சூழலில் ஒட்டுமொத்தமாக தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் 20 அடி சுற்றளவில் ஒரு அடிவரை பள்ளமாகி இருக்கிறது.
தற்போது மூன்று நாட்களாக கனமழையால் தண்ணீர் தேங்கிய சூழலில் வெளியேறாமல் குளம் போல் இருக்கிறது.
இதனால் வாகனங்கள் பள்ளத்தில் தடுமாறுவதால் வாகன ஓட்டிகள் பயணிகள் பீதியுடன் செல்கின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகை கொண்டாடும் சூழலில் ஏராளமான டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் இப்பகுதியை கடக்கிறது.
ஆகவே விழாக் காலங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய துறை அதிகாரிகள் இப்பகுதி ரோட்டை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.