/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள்... ; ராமநாதபுரம் மாவட்ட நீர் நிலைகளில் வளர்கிறது

ADDED : நவ 24, 2024 06:48 AM
மாவட்டத்தில் கண்மாய், ஊருணிகள், சிறு குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளிலும் மனிதர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்த மீன்களை சாப்பிட்டால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் 2013ல் மத்திய, மாநில அரசுகள் இதனை சாப்பிட தடை விதித்துஉள்ளது.
மேலும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் நீர் நிலைகளில் உள்ள மற்ற நன்மை தரும் அனைத்து மீன்களையும் உண்டு அழிக்கின்றன.குறைந்த அளவு நீர், சேறும் சகதியுமான இடங்களில் கூட குறைந்த அளவு ஆக்சிஜன் கிடைத்தால் கூட இவை உயிர் வாழும்.
இந்த மீன்கள் நீரில் உள்ள பாசி, தாவரங்களை கூட உண்ணும். வேறு வழியில்லை என்றால் தனது இனத்தையே உணவாக உண்ணும் தன்மை கொண்டது. இவை ஒரு சீசனுக்கு 4 லட்சம் முட்டைகள் இடும். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் அதிகளவில் இருக்கும்.
இவற்றை உண்டால் உலோகங்கள் ரத்தத்தில் சேர்ந்து அதனால் புற்றுநோய் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படும். ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி மாவட்டத்தில் ஊருணிகள், சிறு குட்டைகள் அதிகம் இருப்பதால் இவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.
விலை குறைவு என்பதால் ஆபத்தை உணராமல் இந்த மீன்களை கிராமங்களில் மக்கள் வாங்கி உண்ணுகின்றனர். எனவே நீர் நிலைகளில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.