/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி கடலில் ஆபத்தான படகு சவாரி மக்கள் .. உயிருக்கு உத்தரவாதமில்லை!
/
தொண்டி கடலில் ஆபத்தான படகு சவாரி மக்கள் .. உயிருக்கு உத்தரவாதமில்லை!
தொண்டி கடலில் ஆபத்தான படகு சவாரி மக்கள் .. உயிருக்கு உத்தரவாதமில்லை!
தொண்டி கடலில் ஆபத்தான படகு சவாரி மக்கள் .. உயிருக்கு உத்தரவாதமில்லை!
ADDED : மே 06, 2024 12:33 AM

தொண்டி : ராமநாதபுரம் மாவட்டத்தில் சில மீனவர்கள் தடையை மீறி கடலுக்குள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மக்களை படகில் அழைத்து செல்கின்றனர். குறிப்பாக தற்போது தொண்டி கடலில் ஆபத்தான முறையில் படகு சவாரி செய்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரசு அனுமதி இன்றி கடலுக்குள் சுற்றுலா பயணிகளுடன் மீனவர்கள் படகுசவாரி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் சில மீனவர்கள் வருமான நோக்கத்தில் பொதுமக்களை பாதுகாப்பற்ற முறையில் படகில் அழைத்து செல்கின்றனர்.
குறிப்பாக கோடை விடுமுறையை முன்னிட்டு தொண்டியில் பகுதிக்கு வரும் பொதுமக்களை மீனவர்கள் கடலுக்குள் அனுமதி இல்லாமல் படகில் அழைத்து செல்கின்றனர். மீன்பிடி படகுகளில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பயணிக்கின்றனர். மீன்பிடி படகுகளில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என தடை இருந்தும், சில மீனவர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்றுக் கொண்டு ஏற்றி செல்கின்றனர்.
10 பேர் பயணம் செல்லக்கூடிய படகுகளில் 20க்கும் மேறபட்டோர் செல்கின்றனர். கடலுக்குள் செல்லும் போது ஆர்வத்தில் பயணிகள் எழ முயற்சிக்கும் போது படகு ஆட்டம் காண்பதுடன் தடுமாறி கவிழ வாய்ப்புள்ளது. இதுவே பெரும்பாலன விபத்திற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. கடந்த காலங்களில் உயிர்பலிகளும் நடந்துள்ளன. எனவே மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளை கண்காணித்து, விபத்திற்கு முன்பாக அனுமதியின்றி படகில் பொதுமக்களை அழைத்துச் செல்லும் மீனவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.