/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினத்தில் ஆபத்தான தென்னங்குண்டு ஊருணி
/
பெரியபட்டினத்தில் ஆபத்தான தென்னங்குண்டு ஊருணி
ADDED : நவ 21, 2025 04:58 AM

பெரியபட்டினம்: பெரியபட்டினம் ஊராட்சி அலுவலகம் பின்புறம் தென்னங்குண்டு ஊருணி ஆபத்தான நிலையில் உள்ளது. ஊருணி அருகே ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.
புதுநகரம், குருத்தமான்குண்டு உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களுக்கு செல்வதற்கு பிரதான சாலையாகும். தென்னங்குண்டு ஊருணியின் பக்கவாட்டு சுவர் இல்லாமல் கரையோடு ஒட்டி நிலையில் பெரிய பள்ளமாக காணப்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது: தென்னங்குண்டு ஊருணியின் பக்கவாட்டு பகுதியில் நான்கு அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் 50 மீ.,க்கு அமைக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு நான்கு வெள்ளாடுகள் ஊருணியில் விழுந்து உயிரிழந்தன.
அப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மற்றும் திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

