/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகையில் ஆபத்தான மின்கம்பம்
/
பரமக்குடி வைகையில் ஆபத்தான மின்கம்பம்
ADDED : ஜன 22, 2024 04:56 AM

பரமக்குடி: -பரமக்குடி வைகை ஆற்றில் மின் கம்பம் சாய்ந்துள்ள நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பரமக்குடி, எமனேஸ்வரம் வைகை ஆறு தரைப்பாலத்தில் 6 மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்பங்கள் நடப்பட்டு 20 ஆண்டுகளை கடந்துள்ளது. தொடர்ந்து மின்விளக்கு வசதி என்பது பெயரளவில் இருக்கிறது.
இந்நிலையில் ஒவ்வொரு முறை வைகை ஆற்றில் தண்ணீர் வரும் போதும் பாலத்தின் இரு புறங்களில் உள்ள தடுப்புச் சுவர்களும் சேதமடைந்து வருகிறது.
இதனை தொடர்ந்து உயரழுத்த மின் கம்பிகள் செல்லும் மின்கம்பம் தற்போது சாய்ந்த நிலையில் உள்ளது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாதக்கணக்கில் தண்ணீர் சென்று வரும் நிலையில் மின்கம்பம் சாய்ந்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது.
இந்த வழியாக பரமக்குடி, எமனேஸ்வரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர்.
எனவே நகராட்சி மற்றும் மின்துறை ஊழியர்கள் மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.