நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் நத்தர் வலியுல்லாஹ் தர்கா கொடியேற்றம் நடந்தது.
முஸ்லிம் பரிபாலன சபைத் தலைவர் அப்துல் வஹாப் கொடியேற்றினார். தலைமை பேஷ் இமாம் ஹாஜா முகைதீன் தலைமையில் வழிபாடு நடத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டது. பரிபாலன சபை செயலாளர் தவ்லத் பாக்கீர் அகமது, நிர்வாக சபைத் தலைவர் ஹம்சத் அலி, செயலாளர் கரீம் கனி, ஐக்கிய முஸ்லிம் சங்க தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சிக்கந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

