/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகம் முன் குடிநீர் தொட்டியில் செத்து மிதந்த பல்லி

ADDED : ஜூன் 20, 2025 11:42 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எஸ்.பி., அலுவலகம் முன்புள்ள குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாமல் பல்லி விழுந்து கிடந்ததால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகம் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பட்டணம் காத்தான் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதே போல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல இடங்களில் இந்த குடிநீர் தொட்டிகள் அனைத்தும் மக்கள் நடை பயிற்சி செல்லும் வழிகளில் வைக்கப்பட்டுள்ளன.
இதே போல் எஸ்.பி., அலுவலகம் முன்பும் பொது மக்கள் பயன் பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த குடிநீர் தொட்டி முறையான பராமரிப்பில்லாமல் மூடி திறந்து கிடந்தது. இந்த தொட்டியில் பல்லி செத்து மிதந்தது.
நல்ல வேளையாக இந்த குடிநீரை மக்கள் பயன்படுத்துவதில்லை. நடை பயிற்சி செல்பவர்கள் இந்த குடிநீர் தொட்டியில் உள்ள நீரை பருகினால் ஆபத்து ஏற்பட்டிருக்கும். பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லி கிடந்த தகவல் எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டதால் உடனடியாக குடிநீரை வெளியேற்றி தொட்டியை சுத்தம் செய்தனர்.