ADDED : மார் 10, 2026 05:20 AM

அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே புதுப்பட்டினம் கடற் கரையில் 50 கிலோ அரிய வகை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
தொண்டி அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் நேற்று காலை 50 கிலோ கொண்ட கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடப்பதை மீனவர்கள் பார்த்தனர்.
மீனவர்கள் கூறுகையில், புதுப்பட்டினம் கடற்கரை ஓரம் நேற்று காலை இந்த கடல் ஆமை இறந்து கிடப்பதை கண்டோம். இது அரிய வகை ஆமை. எப்படி இறந்தது என்று தெரியவில்லை. வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடி யாக தெரிவித்தோம் என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், இவை மீன்பிடி வலைகளில் சிக்கியோ அல்லது விசைப்படகுகள் மோதியதில் உயிரிழந்து இருக்கலாம். இந்த ஆமை பேராமை வகையை சேர்ந்தது என்றனர்.
