ADDED : மார் 15, 2026 05:33 AM

அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே நம்பு தாளை கடற்கரையில் நேற்று காலை மீனவர்கள் வழக்கம் போல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடல் அலை களால் தள்ளப்பட்டு ஆமை ஒன்று கரையில் கிடந்தது. இறந்த நிலையில் இந்த ஆமை 100 கிலோ இருந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாகர் மித்ரா திட்ட பணியாளர் குப்பு, வனத்துறை அலுவலர்கள் விஜய பாஸ்கரன், ரீகன் ஆகியோர் சென்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாதிப்பு இல்லாமல் புதைத்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், இந்த ஆமை மீன்பிடி வலைகளில் சிக்கியோ அல்லது விசைப்படகுகளின் மோதலால் காயம் அடைந்து உயிரிழந்திருக்கலாம். இந்த ஆமை பேராமை வகையை சேர்ந்தது என்றனர்.
