/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரணம் தப்பினால் மரணம்: பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தால் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

ADDED : நவ 14, 2025 04:10 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரங்களில் போதிய பஸ்கள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது. கூடுதலாக பஸ்கள் இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் ஏராளமான பள்ளி, கல்லுாரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பயணிகள் வருகைக்கு ஏற்ப பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லுாரி நேரங்களில் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்வது வாடிக்கையாகியுள்ளது.
போதிய பஸ்கள் இல்லாததால் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் ஸ்டாப்களில் பஸ்சில் இடம் பிடிக்க முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பஸ் படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைவது, உயிர் பலி சம்பவங்கள் நடக்கிறது.
எனவே உயிர் பலிக்கு முன்பாக இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் செயல்படும், முடியும் நேரங்கள் மற்றும் விழாக்காலம், முகூர்த்த நாட்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசாரும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் செல்வதற்கு பஸ்ஸ்டாப் பகுதிகளில் நின்று அறிவுறுத்த வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.