ADDED : அக் 13, 2024 07:52 AM

ராமேஸ்வரம் : விஜயதசமியையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி மகிஷா சூரனை வதம் செய்தார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா அக்.2ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அக்.3 முதல் 11 வரை பர்வதவர்த்தினி அம்மன் அன்னபூரணி, மகாலட்சுமி, சிவதுர்க்கை, சரஸ்வதி உள்ளிட்ட பல அவதாரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று விஜயதசமியில் மாலை 5:30 மணிக்கு கோயிலில் இருந்து தங்க சிம்ம வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மன், தங்க குதிரை வாகனத்தில் ராமநாதசுவாமி புறப்பாடாகி வன்னி நோன்பு திடலில் எழுந்தருளினர்.
இரவு 7:00 மணிக்கு அம்மன் அம்பு எய்து மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் உதயகுமார் நடத்தினார். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பினர்.